
கல்வியில் வேண்டும் புரட்சி - வினோபா
குழந்தைகளுக்கு சிறந்த உடற்பயிற்சியும்,உடல் வளர்ச்சியும் விளையாட்டே ஆகும்.நான் இப்போது என் உடலுக்கு பயிற்சியளிக்கிறேன் என்ற எண்ணம் குழந்தைக்கு ஒரு போதும் ஏற்படுவதில்லை.விளையாட்டின் போது வெளி உலகம் இருப்பதாகவே அவருக்கு தோன்றுவதில்லை.விளையாட்டின் போது குழந்தைகள் வேற்றுமையற்ற நிலையில் அழ்ந்திருஅக்கிறார்கள். செளகரியம்,அசெளகரியம்,பசி,தாகம்,வலி,களைப்பு என்பவையெல்லாம் அவர்களுகுத் தெரியவில்லை.விளையாட்டு அவர்களுக்கு ஒரு ஆனந்தம் , கடமையல்ல அது இன்பம்.அது உடற்பயிற்சி அல்ல.
எல்லாவிதமான கற்றலுக்கும் இந்தத் தத்துவம் யன்படுத்தவேண்டும்.கற்றல் ஒரு கடமையெனும் செயற்கையான கருத்துக்கு பதிலாக கற்றல் ஒரு இன்பம் எனும் இயல்பான கருத்தை வளர்க்க வேண்டும்.