Description
எழுத்தாளர் யூமா வாசுகியின் புதிய சிறார் நூல்…
தீர்க்கமுடியாத நோய்மைகளால் இப்பூமியில் பல குழந்தைகள் வலிமிகுந்த வாழ்வினை வாழ்ந்து வருகிறார்கள். ஆனால், தகுந்த மனிதர்களின் நம்பிக்கைத் துணையால் ஒருசில குழந்தைகள் தங்கள் தாழ்வுணர்ச்சியில் இருந்து மீள்கிறார்கள். நமக்கான முன்னுதாரணமாக எழுந்து நிற்கிறார்கள். அவ்வாறு, தன்னை மீட்டுக்கொண்ட ஒரு சிறுவனின் சாட்சிக்கதை இது. குழந்தைகள் களச்செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான யுவராஜ் அண்ணனின் வாழ்வைத் தழுவி இக்கதை எழுதப்பட்டுள்ளது. ஓவியர் பிரகாஷின் உயிர்ப்பான ஓவியங்கள் இந்நூலை ஓர் அழகிய ஓவியக்கதை புத்தகமாக உருமாற்றியுள்ளது.
தமிழ்ச்சூழலில் கடந்த இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக, சிறார் இலக்கியத்தில் தீவிர அர்ப்பணிப்போடு இயங்கிவரும் எழுத்தாளர் யூமா வாசுகி அவர்களால் இக்கதை எழுதப்பட்டுள்ளது. குழந்தைகள் படைப்புலகு சார்ந்த அவருடைய மொழிபெயர்ப்பு சாதனைகளுக்கவே நம் சமூகம் அவருக்கு நன்றிக்கடன்பட்டுள்ளது. உலகளாவிய அனுபவம் மிகுந்த படைப்புகளால் தமிழ் இலக்கியத்திற்கு வளமூட்டிய ஒரு மூத்த ஆசிரியரிடம் இருந்து ‘தேநீர்க் குடில்’ எனும் இப்படைப்பு தேர்ந்த கதையாகியிருப்பது மிகுந்த நிறைவளிக்கிறது
Reviews
There are no reviews yet.