இனி விதைகளே பேராயுதம்

இந்திய தேசத்தின் முதுகெலும்பாக இருக்கிற விவசாயம் மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்தை உடைத்தெறியாத வரை நம்மால் ஒருபோதும் அத்தேசத்தை வெல்ல முடியாது. ஆகவே, வெளிநாட்டிலிருந்து வருகிற எல்லாமே (ஆங்கிலம் உட்பட) தன்னுடையதைவிட மேலானது என எண்ணுகிற இந்தியர்களாக அவர்களை மாற்றவேண்டும். இரத்தத்தாலும் நிறத்தாலும் இந்தியர்களாக இருந்துகொண்டு, கருத்தாலும் புத்தியாலும் சுவையாலும் ஆங்கிலேயர்களாக இருக்கும் ஒரு கும்பலை உருவாக்க வேண்டும். இந்தியாவை அடக்கி ஆளப்படும் ஒரு நாடாக மாற்ற., அதன் பாரம்பரிய வேளாண் நுட்பங்கள் மற்றும் மரபுக்கல்வி முறைமைகளை மாற்றியமைக்க

தன்னறம் நூல்வெளியின் “டிராக்டர் சாணி போடுமா?”

தன்னறம் நூல்வெளியின் “டிராக்டர் சாணி போடுமா?” புத்தகம் ஜே.சி.குமரப்பாவின் சிந்தனைகளையும் சுயவாழ்வினையும் , அகவிருப்பத்தையும் பலதரப்பட்ட கோணங்களிலிருந்து அறிதலுக்கான ஒரு எளிய புத்தகம். தற்சார்பு சார்ந்தும், இறைப்பொருளியல் மற்றும் சேவைவாழ்வு குறித்தும் எண்ணங்களைக் கொண்டிருக்கும் இளையதலைமுறைப் பிள்ளைகளுக்கான சிறு கைவிளக்கு வெளிச்சமாக இந்நூல் நிச்சயமாக நாங்கள் தீவிரமாக நம்புகிறோம்.

எல்லா உயிரும் பசி தீர்க

“ரஷ்ய விஞ்ஞானி ஒருத்தன் ஒரு கேள்வி கேட்டான். இந்த பூமி அண்டவெளியில் பந்து போல சுற்றிக் கொண்டிருக்கிறது. அப்படியானால் அது நைட்ரஜன் கடலில்தானே மிதக்கிறது? பூமியே நைட்ரஜன் கடலில் மிதக்க, நீ எதற்கு அங்குபோய் யூரியாவை கொட்டுகிறாய்? என்று. சரியான கேள்விதானே இது! ஆனால், நிறைய மக்களுக்கு இது சென்று சேரவில்லையே. இந்த யூரியாவை வாங்கத்தானே கடன். அந்தக் கடனை அடைக்க முடியாததால்தானே தற்கொலைகள் நடக்கிறது. ஆக, நம் தலையில் மிளகாய் அரைத்ததில் முதலாவது ‘நைட்ரஜன்’ இரண்டாவது,

நிகழ்ந்தவற்றின் தடமின்றி எஞ்சுவதே விண்

“நீங்கள் நம்புகிற சித்தாந்தத்துக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் இருங்கள். அந்த சித்தாந்தங்கள் எப்பொழுதும் எளியமக்களுக்கானதாக இருக்கட்டும். அவர்களோடு வாழ்வுகலந்து அவர்களுள் ஒருவனாக மாறிப்போவதில்தான் சித்தாந்த முழுமை என்பதமையும். அந்த எளிய மக்களின் உழைப்பையே நாம்விரும்பும் மாற்றத்திற்கான செயல்வழிப்பாதையாக ஆக்கிக்கொள்ள வேண்டும். ஒரு சித்தாந்துகான சாட்சிகள் உருவாகும்போது, அது தானாகவே சாத்தியங்களை உருவாக்கும்” எழுபது வயதிலும் எளிய மக்களின் நலனுக்காக களமமைத்து அவர்களுக்கான அரசியலறிவை புகட்டிவரும் செயல்வாதி த.ம.பிரகாஷ் அவர்கள், தன்னுடைய அனுபவங்களின் வேராழத்திலிருந்து சொற்களைப் பகிர்ந்து, நம்மாழ்வாரின் “எல்லா

செயல்வழியே சத்தமெழுப்புவோம் அதிகாரத்திற்கு எதிராக

உலகதேசங்கள் எல்லாமே கொடிய எண்டோசல்பான் விஷத்தை தடைசெய்த போது, இந்திய அரசாங்கம் மட்டும் அதற்கு சம்மதிக்காமல் ‘இந்தியா ஏழைநாடு. இதை தடைசெய்தால் நம் நாடு மேலும் வறுமைக்குள் சென்றுவிடும்’ என்றுசொல்லி அந்நஞ்சின் அனுமதிக்காக உலகநீதிமன்றத்தில் இரந்து நின்றது. ஆக, ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் நியாயத்தின் பக்கம் நிற்காமல் அதிகாரத்தின் ஆளுகைக்குள் அடிமைப்பட்டிருக்கும் துர்காலத்தில், ஏதுமறியாத எளியமக்கள் அவ்வதிகாரத்தின் கோரப்பசிக்கு சாவது மட்டும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேஇருக்கிறது. நம்மாழ்வார் அய்யவுடைய குரல், ஏதோவொருவகையில் அடித்தட்டு சாமானியனின் எளியகுரலாகவே எப்போதும் ஒலித்திருக்கிறது. அவர்களின்