குளக்கரைகளில் இளைப்பாறும் வரலாறு
புத்தக வெளியீட்டு நிகழ்வு மேற்குமலைத்தொடர்ச்சியின் விரிந்துநிற்கும் அந்தப் பெருமலையின் அடிவாரத்தில் முளைத்துநிறைந்த அடர்காட்டுக்குள் அமைந்திருக்கிறது அக்கிணறு. இப்போது வேண்டுமானால் மண்பாதைகளும் சென்றடையும் வழிகளும் வந்துவிட்டிருக்கலாம். ஆனால், காலத்தின் நூறாண்டுகளுக்கு முன்பு, எத்தனையோ இடர்களைத் தாண்டியும் யாரோ ஒரு மனிதன் அந்தக் கிணற்றை அங்கு வெட்டியிருக்கிறார். அவ்வளவு கட்டுமான நேர்த்தியோடும் வடிவின் நிறைவழகோடும் ஆழப்பட்டிருக்கும் அந்தக் கிணறு, இன்றைக்கு நீரற்று தூர்ந்த நிலையிலிருக்கிறது. சொட்டுத்தண்ணீரைக்கூட கிணற்றின் சுனையில் சுரக்கவில்லை. இதற்கு என்ன காரணமென உள்ளெண்ணிப் பார்த்தால், ஏதோவொருவகையில் நம்