விதைவழி செல்க – நம்மாழ்வார்
புத்தக அறிமுகம் விதைசார் அரசியலை அறிவதற்கான எளியவாசல் இப்புத்தகம்: ஒரு கிராமத்தில், ஒரு வீட்டுப்பரணில் பழைய ராட்டை ஒன்று கிடந்தது. அந்த ராட்டையை கீழே இறக்கி தூசு தட்டினார்கள். அதில் எப்படி நூல் நூற்பது என்று காந்திக்கு அக்கிராமத்து மக்கள் கற்றுக்கொடுத்தார்கள். மக்கள்தான் முதன்முதலில் காந்திக்கு நூல் நூற்க சொல்லிக் கொடுத்தார்கள்! அதன்பிறகு, “இந்த ராட்டைகளை நிறைய செய்துகொள்ளுங்கள். நாம் எல்லோருமே நூல் நூற்கலாம். நாமே பஞ்சை விளைய வைப்போம். நாமே நெய்வோம். நாமே அவைகளை உடுத்திக்கொள்வோம்”