சுய நிறைவின் தேடலுக்கான புத்தகம்…

டிராக்டர் சாணி போடுமா? என்ற கேள்வி வெறும் அறிவின் புத்தியில் இருந்து உருவான கேள்வி மட்டுமல்ல, அப்பழுக்கற்ற தூய இருதயத்தில் இருந்து உருவான அன்பின் ஆழம்பொதிந்த கேள்வி. செறுக்கின் உச்சியில் இருக்கும் ஒட்டுமொத்த அறிவியல் உலகனைத்திற்கும் அதன் மனசாட்சியை நோக்கி எழுப்பிய கேள்வி. அதனால்தான் அறிவியலினால் இனி ஒன்றும் இயலாது என்றுணர்ந்து இறுதிகட்டத்தில் இருக்கும் ஒட்டுமொத்த கிழக்கு கூட்டத்தின் மனசாட்சி இன்று ஜே.சி.குமரப்பாவையும் அவரை உருவாக்கிய காந்தியத்தையும் அங்குலம் அங்குலமாக தேடுகிறது. இந்த கேள்வி விவசாயிகளுக்கானது என்று