குளக்கரைகளில் இளைப்பாறும் வரலாறு

புத்தக வெளியீட்டு நிகழ்வு மேற்குமலைத்தொடர்ச்சியின் விரிந்துநிற்கும் அந்தப் பெருமலையின் அடிவாரத்தில் முளைத்துநிறைந்த அடர்காட்டுக்குள் அமைந்திருக்கிறது அக்கிணறு. இப்போது வேண்டுமானால் மண்பாதைகளும் சென்றடையும் வழிகளும் வந்துவிட்டிருக்கலாம். ஆனால், காலத்தின் நூறாண்டுகளுக்கு முன்பு, எத்தனையோ இடர்களைத் தாண்டியும் யாரோ ஒரு மனிதன் அந்தக் கிணற்றை அங்கு வெட்டியிருக்கிறார். அவ்வளவு கட்டுமான நேர்த்தியோடும் வடிவின் நிறைவழகோடும் ஆழப்பட்டிருக்கும் அந்தக் கிணறு, இன்றைக்கு நீரற்று தூர்ந்த நிலையிலிருக்கிறது. சொட்டுத்தண்ணீரைக்கூட கிணற்றின் சுனையில் சுரக்கவில்லை. இதற்கு என்ன காரணமென உள்ளெண்ணிப் பார்த்தால், ஏதோவொருவகையில் நம்

மூன்று புத்தகங்கள் வெளியீடு…

தும்பி – தன்னறம் அரங்கு எண் -20 இன்று மதுரை புத்தக கண்காட்சியில் இயற்கை விவசாயம் மற்றும் அதோடு இயைந்த வாழ்வியலை, எளிமையாய் எடுத்து உரைக்கும் மசானபு புகோகா அவர்களின் “ஒற்றை வைக்கோல் புரட்சி” நம் அன்றாடத்தில் இரண்டற கலந்து நிற்கும் பிளாஸ்டிக் குறித்த எதிர்ப்பினை சரியான புரிதலின் வழி உருவாக்கி வரும் க்ரீன் பேஜஸ்ன் “பிளாஸ்டிக் காலம்” மற்றும் மரங்கள் குறித்த தெளிந்த உண்மையினை வெகு ஜன மக்கள் மொழியில் சொல்லும் நாணல் நண்பர்களின் “மண்ணின்

நிகழ்ந்தவற்றின் தடமின்றி எஞ்சுவதே விண்

“நீங்கள் நம்புகிற சித்தாந்தத்துக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் இருங்கள். அந்த சித்தாந்தங்கள் எப்பொழுதும் எளியமக்களுக்கானதாக இருக்கட்டும். அவர்களோடு வாழ்வுகலந்து அவர்களுள் ஒருவனாக மாறிப்போவதில்தான் சித்தாந்த முழுமை என்பதமையும். அந்த எளிய மக்களின் உழைப்பையே நாம்விரும்பும் மாற்றத்திற்கான செயல்வழிப்பாதையாக ஆக்கிக்கொள்ள வேண்டும். ஒரு சித்தாந்துகான சாட்சிகள் உருவாகும்போது, அது தானாகவே சாத்தியங்களை உருவாக்கும்” எழுபது வயதிலும் எளிய மக்களின் நலனுக்காக களமமைத்து அவர்களுக்கான அரசியலறிவை புகட்டிவரும் செயல்வாதி த.ம.பிரகாஷ் அவர்கள், தன்னுடைய அனுபவங்களின் வேராழத்திலிருந்து சொற்களைப் பகிர்ந்து, நம்மாழ்வாரின் “எல்லா

செயல்வழியே சத்தமெழுப்புவோம் அதிகாரத்திற்கு எதிராக

உலகதேசங்கள் எல்லாமே கொடிய எண்டோசல்பான் விஷத்தை தடைசெய்த போது, இந்திய அரசாங்கம் மட்டும் அதற்கு சம்மதிக்காமல் ‘இந்தியா ஏழைநாடு. இதை தடைசெய்தால் நம் நாடு மேலும் வறுமைக்குள் சென்றுவிடும்’ என்றுசொல்லி அந்நஞ்சின் அனுமதிக்காக உலகநீதிமன்றத்தில் இரந்து நின்றது. ஆக, ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் நியாயத்தின் பக்கம் நிற்காமல் அதிகாரத்தின் ஆளுகைக்குள் அடிமைப்பட்டிருக்கும் துர்காலத்தில், ஏதுமறியாத எளியமக்கள் அவ்வதிகாரத்தின் கோரப்பசிக்கு சாவது மட்டும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேஇருக்கிறது. நம்மாழ்வார் அய்யவுடைய குரல், ஏதோவொருவகையில் அடித்தட்டு சாமானியனின் எளியகுரலாகவே எப்போதும் ஒலித்திருக்கிறது. அவர்களின்