இனி விதைகளே பேராயுதம்
இந்திய தேசத்தின் முதுகெலும்பாக இருக்கிற விவசாயம் மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்தை உடைத்தெறியாத வரை நம்மால் ஒருபோதும் அத்தேசத்தை வெல்ல முடியாது. ஆகவே, வெளிநாட்டிலிருந்து வருகிற எல்லாமே (ஆங்கிலம் உட்பட) தன்னுடையதைவிட மேலானது என எண்ணுகிற இந்தியர்களாக அவர்களை மாற்றவேண்டும். இரத்தத்தாலும் நிறத்தாலும் இந்தியர்களாக இருந்துகொண்டு, கருத்தாலும் புத்தியாலும் சுவையாலும் ஆங்கிலேயர்களாக இருக்கும் ஒரு கும்பலை உருவாக்க வேண்டும். இந்தியாவை அடக்கி ஆளப்படும் ஒரு நாடாக மாற்ற., அதன் பாரம்பரிய வேளாண் நுட்பங்கள் மற்றும் மரபுக்கல்வி முறைமைகளை மாற்றியமைக்க