Description
“ரஷ்ய விஞ்ஞானி ஒருத்தன் ஒரு கேள்வி கேட்டான். இந்த பூமி அண்டவெளியில் பந்து போல சுற்றிக் கொண்டிருக்கிறது. அப்படியானால் அது நைட்ரஜன் கடலில்தானே மிதக்கிறது? பூமியே நைட்ரஜன் கடலில் மிதக்க, நீ எதற்கு அங்குபோய் யூரியாவை கொட்டுகிறாய்? என்று.
சரியான கேள்விதானே இது!
ஆனால், நிறைய மக்களுக்கு இது சென்று சேரவில்லையே. இந்த யூரியாவை வாங்கத்தானே கடன். அந்தக் கடனை அடைக்க முடியாததால்தானே தற்கொலைகள் நடக்கிறது. ஆக, நம் தலையில் மிளகாய் அரைத்ததில் முதலாவது ‘நைட்ரஜன்’ இரண்டாவது, நியூட்ரிஷன் (Nutrition). நிறையப்பேர் ‘Nutrition’ ‘Nutrition’ என்று கூக்குரலிடுகிறார்கள் அதாவது, Plant Nutrition. ‘செடி சாப்பிடுகிறது’ என்கிறார்கள்.
எவ்வளவு காலத்துக்கு இந்தப் பொய்யை சொல்லிக்கொண்டு திரிவீர்கள்? செடி சாப்பிடவே இல்லையே! மனிதர்கள் தோன்றுவதற்கு முன்பே செடிகொடிகள் தோன்றிவிட்டதே, அதற்கு யார் உணவு கொடுத்து வளர்த்தது? காட்டில் உள்ள செடிகொடிகள், வீட்டுக்கு முன்பு உள்ள வேப்பமரம், ஆற்றங்கரையில் உள்ள தென்னை மரங்கள், சாலையோரத்து புளியமரங்கள்… இவை எல்லாவற்றுக்கும் எவன் யூரியா போட்டது? எவன் DAP போட்டது? வருடாவருடம் காய்க்கவில்லையா அந்த மரங்கள்? பலன் கொடுக்கத்தானே செய்கிறது…”
எல்லா உயிரும் பசி தீர்க – நம்மாழ்வார் உரையின் எழுத்துவடிவமாக உருப்பெற்றிறுக்கிறது இந்தப் புத்தகம்
Reviews
There are no reviews yet.