Description
காகித மடிப்புக்கலை ஒரிகாமியைக் கற்றுக்கையிலெடுத்து குழந்தைகளிடம் இயங்குகிறார். சாதாரணமாக நினைக்கும் வெற்றுக்காகிதத்தை மகிழ்வுதரும் உருவங்களாக மாற்றி நம் கண்ணோட்டத்தை சீர்படுத்தி வியப்பை ஏற்படுத்துகிறார். அவரிடம் பேசும்போது அவரொரு வார்த்தை சொன்னார், அது “சாதாரண சின்னகிராமத்தில் இருக்கும் ஒரு குழந்தை தான் மடித்துசெய்த கொக்கையோ, தும்பியையோ, யானையையோ உயிர்பொம்மையாக நினைத்து அதை எடுத்துக்கொண்டுபோய் அவளுடைய விளையாட்டுப்பொருட்களுடன் சேர்த்து வைத்துகொள்வாள் எனில் அதுதான் நான் நம்பும் புரட்சி”.
பத்துவருடகாலமாக ஒவ்வொரு கட்டத்திலும் தியாகசேகருடைய தன்னுணர்தலையும் அதுசார்ந்த மனமாறுதல்களையும் நாங்கள் கண்டுவருகிறோம். அவருடைய இந்த கொக்குகளுக்காகவே வானம், தமிழ் ஓரிகாமிப் புத்தகம் காலத்தால் அவசியாமனதாக நாங்கள் நினைக்கிறோம். அவரின் மெனக்கெடல்களையும், நிறைய உழைப்பையும் உட்சுமந்து இப்புத்தகம் தன்னறம் நூல்வெளி பதிப்பில் வெளிவருகிறது.
Reviews
There are no reviews yet.