தன்னறம் நூல்வெளி

என் கனவின் கதை

70.00

Loading...

Description

“கதைகளே நம் உள்ளத்தில் ஆழக்கிடக்கும் குழந்தைமையை மலர்த்தக் கூடியவை. அதுவும் சிறார் கதைகள் எனும்போது மகிழ்ச்சியான உலகில் நம்மை அழைத்துச் சென்றுவிடும். அதுவும் சிறுவர்களே எழுதிய கதை எனும்போது பெரியவர்கள் கனவிலும் தோன்றாத கற்பனை உலகைப் பரிசளிக்கக்கூடியவை. அப்படித்தான் மாணவர்களின் இக்கதைகள் மறக்கவே முடியாத பரிசைப் போல உள்ளன. ஒவ்வொரு மாணவரின் கற்பனை ஆற்றலும் அதை வெளிப்படுத்தும் விதமும் நம்மை வியக்க வைக்கின்றன.

சில கதைகள் நல்லதொரு கவிதையைப் படித்த அற்புத உணர்வைத் தருகின்றன. சில கதைகள், ’இந்த வரிகளை எப்படி இந்த வயதில் இவர்களால் எழுத முடிந்தது?’ என்ற வியப்பைத் தருகின்றன. இன்னும் சில கதைகள் அவர்களைச் சுற்றியுள்ள இடங்களையும் மனிதர்களையும் எவ்வளவு நேசிக்கிறார்கள் என்பதைச் சொல்கின்றன. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதம்… ஒவ்வொரு சுவை… அவசியம் வாசியுங்கள்.”

~ விஷ்ணுபுரம் சரவணன்

கும்பகோணம் அறிஞர் அண்ணா அரசுப்பள்ளி மாணவர்கள் எழுதித் தொகுத்த 25 கதைகளின் தொகுப்பானது ‘என் கனவின் கதை’ எனும் தலைப்பில் தன்னறம் நூல்வெளி வாயிலாக புத்தகமாக உருப்பெறுகிறது. இதற்குப் பின்புலமாக நிறைந்திருக்கும் எழுத்தாளர் ராணி திலக் அவர்களின் உடனிருப்பும் உளத்தூண்டலும் எல்லாவகையிலும் வணக்கத்திற்குரிய ஒன்று. ஓர் நல்லாசிரியர் காட்டும் திசைப்பாதை அவரவர்களுக்கு கனவுகளில் மகிழ்வோடு பயணிக்கச் செய்வன. இந்த இருபத்தைந்து கதைகளுமே தனித்தனிக் குழந்தைகளின் வாழ்வனுபவம் மற்றும் கற்பனைக்கரு ஆகியவற்றின் விளைவால் எழுத்தானவை.

Reviews

There are no reviews yet.

Be the first to review “என் கனவின் கதை”

Your email address will not be published. Required fields are marked *

Related Books

துஆ

250.00

பாலைநிலவன் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள்

250.00

புரட்சியில் பூத்த காந்திய மலர்கள்

350.00

செயலறம்

300.00

மனுசபுராணம்

375.00

வீரான்குட்டி கவிதைகள்

100.00