தன்னறம் நூல்வெளி

கவிதையின் மதம்

150.00

Loading...

Description

“முழுமையின் முழுவாழ்வின்
கண்ணீர் என்றொன்றும்
காதல் என்றொன்றும்
இருக்கவே இருக்கிறது
ஆற்றல்களெல்லாம் அடக்கப்படாமலேயே
கொந்தளித்துக் குழைந்துகொண்டு கிடக்கும்
அமைதி என்பதும் அதுதான்.
கவிதை என்பதும் அதுதான்.”

~ தேவதேவன்

தேவதேவனின் கவிதைகளால் பன்னீர் மரமொன்றின் இருப்பை சராசரி விழிப்பு நிலைக்கு அப்பாலிருந்து பல்வேறு பரிமாணங்களில் பார்க்க முடிகிறது. மையக்கருத்தின் சாத்தியக்கோணங்கள் அவ்வளவையும் திறந்துகாட்ட முடிகிறது.
அவரது கவிமனம் ஒன்றின்பால் ஒருபோதும் சலிப்புறுதல் நிலையை அடையாதது. அன்றாட வழியில் காணும் பறவையின் ஒற்றை கானத்தை அவருக்கு எழுதித் தீருவதேயில்லை. தினசரியில் பங்குகொள்ளும் எதன்பொருட்டும் அயற்சியுறாத மனமே அவர் கவிதைகளில் இந்நாள் வரியிலும் வெளிப்பட்டு வந்துகொண்டிருக்கிறது. கவிதை நிழந்த பின்பு, தன்னைத்தானே ஆய்கிறது.
கவிதைகள் குறித்த தேவதேவன் அவர்களின் இக்கட்டுரைத் தொகுப்பு கவிதையின் இயக்கத்தை வெவ்வேறு கோணங்களில் துலக்கமடையச் செய்வதாக இருக்கிறது. புதிதாக எழுதவருவோருக்கும், கவிதையுடன் இன்னும் நெருங்க விளைவோருக்குமான திறப்பாக இந்நூல் நிச்சயம் அமையும். தேவதேவன் சொல்வது போலவே இந்நூலில் நிகழ்வது கவிதையனுபவம் குறித்த விளக்கமல்ல. ஆய்வு. சிறுபார்வை. மீண்டும் முயலும் ஒரு எடுத்துரைப்பு

Reviews

There are no reviews yet.

Be the first to review “கவிதையின் மதம்”

Your email address will not be published. Required fields are marked *

Related Books

துஆ

250.00

பாலைநிலவன் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள்

250.00

புரட்சியில் பூத்த காந்திய மலர்கள்

350.00

செயலறம்

300.00

மனுசபுராணம்

375.00

வீரான்குட்டி கவிதைகள்

100.00