Description
இனி விதைகளே பேராயுதம்
இந்திய தேசத்தின் முதுகெலும்பாக இருக்கிற விவசாயம் மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்தை உடைத்தெறியாத வரை நம்மால் ஒருபோதும் அத்தேசத்தை வெல்ல முடியாது. ஆகவே, வெளிநாட்டிலிருந்து வருகிற எல்லாமே (ஆங்கிலம் உட்பட) தன்னுடையதைவிட மேலானது என எண்ணுகிற இந்தியர்களாக அவர்களை மாற்றவேண்டும்.
இரத்தத்தாலும் நிறத்தாலும் இந்தியர்களாக இருந்துகொண்டு, கருத்தாலும் புத்தியாலும் சுவையாலும் ஆங்கிலேயர்களாக இருக்கும் ஒரு கும்பலை உருவாக்க வேண்டும். இந்தியாவை அடக்கி ஆளப்படும் ஒரு நாடாக மாற்ற., அதன் பாரம்பரிய வேளாண் நுட்பங்கள் மற்றும் மரபுக்கல்வி முறைமைகளை மாற்றியமைக்க நான் பரிந்துரைக்கிறேன்.
– லார்டு மெக்காலே (02 பிப்ரவரி 1835ல் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பேசியது)
வரலாற்றின் வழிப்பாதையில் எந்தெந்த இடத்திலெல்லாம் இந்திய உழவாண்மை வாழ்வியல் இருட்டடிப்பு செய்யப்பட்டது என்பதனை தெளிவுற அறிவதற்கும், இனி என்னென்ன வழிமுறைகளினால் நாம் சொந்தக்காலூன்றி மேலெழ வேண்டும் என்கிற நுட்பத்தகவல்களோடும் அமைந்திருக்கிறது நம்மாழ்வாரின் ‘இனி விதைகளே பேராயுதம்’ புத்தகம். குக்கூ காட்டுப்பள்ளியின் தன்னறம் பதிப்பின் வெளியீடாக இப்புத்தகம் மறுஅச்சு அடைந்து வெளிவருகிறது.
நம்மாழ்வாரின் பயணத்தடங்கள், பச்சைப்புரட்சியின் சீரழிப்பு, வணிக உழவாண்மையின் கொடுந்தீமை, விவசாய அறிவியல், அறம் நழுவிய அரசு, மண்மரபு நுண்ணுயிர் வேளாண்மை, தற்சார்பு வாழ்வியலாக்கம், சந்தேகங்களைத் தீர்க்கும் கேள்விபதில் உரையாடல்கள், விதைகளின் மானுடப் பன்மயம்… உள்ளிட்ட உயிர்ச்சமூகத்தின் வாழ்வாதார சேதிகள் அனைத்தையும் ஆழ்வாரின் எழுத்துக்குரலில் அழுத்தமாகப் பேசுகிறது இந்தப் புத்தகம்.
Reviews
There are no reviews yet.