Description
உப்புவேலி – உலகின் மிகப்பெரிய உயிர்வேலியின் வரலாற்று ஆவணம்
2300 மைல்கள் தொலைவு நீளமுள்ள ஒரு புதர்வேலியை உருவாக்கியது ஆங்கிலேயக் கிழக்கிந்திய கம்பெனி. உப்பின் மீது உயர்வரி விதித்து, உப்புப் பரிமாற்றத்தை தடைசெய்வதற்காகவே, இமயமலையிலிருந்து ஒரிசா வரைக்கும் இந்தியாவையே இரண்டாகப் பிரித்தது அவ்வேலி. மனித வரலாற்றிலேயே மிகப்பெரிய கட்டுமானங்களுள் ஒன்று. சொல்லப்போனால், உலகிலேயே மிகப்பெரிய உயிர்வேலி அது. ஆனால், அந்த வேலியைப்பற்றிய ஒட்டுமொத்த நினைவுகளும் ஒரு நூற்றாண்டுக்குள் முற்றிலுமாக இத்தேச மக்களுக்கு மறந்துபோனது. பழங்ககதைகள் துவங்கி தற்போதைய வரலாற்று நூல்கள்வரை எதிலும் அந்த வேலிபற்றிய சிறுகுறிப்புகூட இடம்பெறவில்லை. பிரிட்டனிலிருந்து கிளம்பிவந்து, ஒரு தேசமே மறந்துவிட்ட சுங்கவேலியின் மிச்சமான சிறுபகுதியைக் கண்டடைந்து ஆவணப்படுத்தினார் வரலாற்று ஆய்வாளர் ராய் மாக்ஸம்.
சமகால இந்திய வரலாற்றாவணங்களில் தவிர்க்கமுடியாத ஆக்கங்களில் இப்புத்தகமும் இடம்கொள்கிறது. இந்தியாவின் கடைக்கோடி கிராமத்து நிலங்களில் வரைபடங்களோடு அலைந்துதிரிந்து, இறுதிவரை முயிற்சியைக் கைவிடாமல் பயணித்த ஆசிரியர் ராய் மாக்ஸம் அவர்களின் பெருந்தேடல், உலகின் மிகப்பெரிய உயிர்வேலியை நமக்கு ஆவணப்படுத்திக் கொடுத்துள்ளது. தவறவிட்டுவிடக்கூடாத வரலாற்று ஆவணமான ‘உப்புவேலி’ புத்தகம், சிறில் அலெக்ஸ் அவர்களின் தமிழாக்கத்தில், தன்னறம் நூல்வெளி வாயிலாக மீள்பதிப்பாக பதிப்பிக்கப்பட்டு (கெட்டி அட்டையுடன்) வெளிவந்துள்ளது.
Reviews
There are no reviews yet.