Description
காலம் பாரித்த ஓர் உள்ளங்கை
~
எந்தக் கைவிரல்கள்
மாயத்தின் சாயத்தைக்
குழைத்துக் கொண்டதோ
எந்தக் கனவுகள்
காலத்தின் பழுப்பில் மிதந்தலைந்ததோ
எந்த ஆன்மா
துயரத்தையும் ஆனந்தத்தையும்
மொழியின் ஒளி பிடித்து நகர்ந்ததோ
அந்த ஒன்றே
கவிதையாக எங்கோ நிகழ்கிறது
உள்ளும் புறமும்
வெளியெங்கும்
சதாநித்ய காலமும்
கவிதை நிகழ்ந்து
கொண்டே இருக்கிறது
அதன் மாயத் திரியில்
சில கணங்கள்
எதோ சில விரல்கள்
ஜோதியைக் கூட்டுகிறது
அந்தக் கைவிரல்கள்
யாருடையது
என்பதல்ல
அந்தக் கணம் நித்யத்திலிருந்தது
அதன்
ஸ்பரிசத்தை தொட்டு எழுதியவனுக்கும்
ஒரு பெயர் இருந்தது
ஆயினும்
அவன் தன் பெயரில் எழுதவில்லை
நித்ய கணத்திலமர்ந்து
கவிதையின்
தோலில் எழுதினான்
அக்கவிதை கணம்
உதிர்ந்ததிற்குப்பிறகு
அவன்
எழுந்து எங்கோ சென்று விட்டான்
நித்ய கணம்
எழுந்து சென்றவனை
பார்த்துக் கொண்டிருக்கிறது
அன்றாடத்தின் அலுப்பில்
லௌகீக யதார்த்ததின்
முன்
காண்பதற்கும் புலப்படாததிற்கும்
நடுவே
யாருடைய
கண் முன் கவிதை
சதா
தன் நித்ய
நாட்டியத்தை நிகழ்த்துகிறது
நாமறியாத காலத்திலிருந்த
குட்டி குட்டி நட்சத்திர
மண் துகள்களை
டோனி பிரெஸ்லர்
தேடிக்கண்டெடுத்து
உள்ளங்கையில்
சேர்ப்பித்திருக்கிறார்
கவிதையின் மாயம்
சில கணங்களில் மின்னுகிறது
அது மாயமும்
அபோதமும்மிக்கது
~ பாலைநிலவன்
Reviews
There are no reviews yet.