தாய் மண்

500.00

Loading...

Description

இன்று நமது பண்ணையம் பரிதாப நிலையில் இருப்பதற்குக் காரணம் என்ன? பச்சைப் புரட்சிக்கு முன்பு வரை வெள்ளாமை என்பது தன் தேவைகளுக்கு வேண்டியதை விளைவிப்பது, விளைந்ததைக் கொண்டு வாழ்வதுதான். இந்த நிலை மாறி சந்தைக்கும், ஆலைகளுக்கும் வேண்டியதை விளைவித்ததால் குடும்பத்துக்கான உணவு தானியங்கள் கூட கடைகளில் இருந்து வருகின்றன.

பண்ணையானது தனக்குத் தேவையான இடு பொருட்களைப் பண்ணைக்குள்ளேயே பெற்ற நிலை மாறி கிராமத்திற்கு வெளியே நகரங்களில் இருந்து பெறுகின்ற அவல நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது. இந்தக் காரணங்களால் இப்போது வெள்ளாமை செய்வதும் பண்ணையம் பார்ப்பதும் வேறு எந்த வேலையும் கிடைக்காதவர்கள் செய்யும் பணியாகிவருகிறது.

பண்ணையும், பண்ணையமும் மீண்டும் தலை நிமிர்ந்து நிற்க, தற்சார்புடன் இருக்க வேண்டும். நிலத்திற்கும், அதில் வாழும் உயிரினங்களுக்கும், வளர்க்கும் பயிர்களுக்கும், கால்நடைகளுக்கும். பணியாட்களுக்கும், உழவர்களின் குடும்பத்திற்கும் வேண்டிய எல்லாவற்றையும் கொடுக்கக்கூடிய தற்சார்பு பண்ணையாக மாறவேண்டும்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “தாய் மண்”

Your email address will not be published. Required fields are marked *

Related Books

மரத்தடியே ஒரு பள்ளிக்கூடம்

150.00

கல்வியியல் சிந்தனைகள்

300.00

ஓர் ஆசிரியர்

300.00

கும்பகோணம் கதைகள்-இராணிதிலக்

150.00

பூமித்தாயே

130.00

தாய் மண்ணே வணக்கம்

110.00