Description
நியூசிலாந்துப் பழங்குடிகளான மாவோரி இனச் சிறார்களின் கல்விக்காக ஆசிரியை சில்வியா ஆஷ்டன் வார்னர் சுமார் 24 ஆண்டுகள் பணிசெய்தார். தன்னுடைய அனுபவங்களைத் திரட்டி ‘ஓர் ஆசிரியர்’ என்ற புத்தகமாகவும் எழுதினார். வாழ்வது எப்படியெனக் கற்றுக்கொள்வதுதான் அறிவு பெறுவதைவிட முக்கியமானது. சில்வியா செயல்படுத்திய ‘இயல்பான கற்பித்தல் அணுகுமுறை’ குழந்தைகளின் மனப்பாங்கை போரிலிருந்து அமைதிக்குத் திருப்புவதற்கான முக்கிய அடிப்படையாக அமைகிறது.
ஆசிரியரின் கடமை என்பது குழந்தைகளிடமுள்ள இயல்பான ஆற்றல்களை அவிழ்ப்பதற்கான ஆக்கப்பூர்வ வழிகளை நடைமுறைப்படுத்துவது. இது ஒரு புதிய கருத்தல்ல. பிளேட்டோவின் காலத்திலிருந்தே இருக்கிறது. ஆனால் மனிதகுலத்திற்கோ இந்த நுண்ணறிவுகளை கல்விச்செயல்பாடுகளில் பயன்படுத்துவதற்கான விருப்பமோ அறிவோ இல்லை. இத்தகையக் கருத்துகளை படிப்படியாக கல்வியில் எப்படி பயன்படுத்தலாம் என்று இப்புத்கம் முழுமையாக விளக்குகிறது.
பள்ளிக்கூடத்தைப் பற்றி நாம் கற்பனை செய்யும்போது அது ‘மாற்றத்திற்கு ஆயத்தமாக உள்ள மக்களின் காப்பகம்’ என்றே கருத வேண்டும். மாற்றம் நிகழ்வதற்கான காரணிகளாக அங்கு படைப்பாக்கச் செயல்பாடுகள் இருக்கும். எதிர்கால மனித சமூகம், அது எவ்விதத்தில் இருந்தாலும்கூட இக்கருத்து மிகமிக முக்கியமானது.
இப்புத்தகத்தில் வரும் அறிக்கைகள் எல்லாம் உண்மைத் தரவுகளின் அடிப்படையில் எழுதியவை. ஆகவே, கற்பித்தல் முறையை விளக்குவதற்குப் பதிலாக அந்தச் சமூகத்தின் அழகான சித்திரத்தை நம்முன் தீட்டும் ஆவணமாக மாறுகிறது. இருப்பினும் இது நம்மை நெகிழச் செய்கிறது. குழந்தைகளுக்கு கற்பிக்கும் ஒவ்வொருவருக்கும் இது பயனுள்ளதாக இருக்கிறது. அவ்வகையில் இது ஒரு முக்கியமான புத்தகம். வரலாற்றின் இந்தக் காலகட்டத்தில் எந்தப் புத்தகத்தையும் போலவே, இந்தப் புத்தகமும் மிகவும் முக்கியமானது.
வரலாற்றாசிரியர் சர் ஹெர்பர்ட் ரீட்

Reviews
There are no reviews yet.