Description
“நாம் வேகமாக வளர்ச்சி கண்டிருக்கிறோம். ஆனால் நமக்குள்ளேயே முடங்கியும் போய்விட்டிருக்கிறோம். ஆனால், இயந்திரமயம் என்பது நம்மை மேலும் மேலுமான விருப்பத்தில் கொண்டுபோய் தள்ளிவிட்டது. நம் அறிவு நம்மை எரிச்சல் மிக்கவர்களாக மாற்றிவிட்டது. நமது புத்திசாலித்தனம் இறுக்கமானவர்களாகவும் நேசமற்றவர்களாகவும் நம்மை மாற்றிவிட்டது. நாம் அதிமாகச் சிந்திக்கிறோம். ஆனால் குறைவாகவே உணர்வுவயப்படுகிறோம். இயந்திரமயத்தைவிட மனிதநேயமே நமது தேவை. புத்திசாலித்தனத்தைவிட அன்பும் மென்மையுமே தேவை. இந்தப் பண்புகள் இல்லாவிட்டால் வாழ்வு வன்முறையானதாக மாறிவிடும். ஆகவே, புதிய உலகிற்காக போரிடுவோம்! அது ஒரு நாகரீகமான உலகம்!”
– சார்லி சாப்ளின்
“தாயின் இதயத்துடிப்பை உணரும் பிறந்த குழந்தை போல இந்த பூமியை நாங்கள் நேசிக்கிறோம். ஆதலால் இதை உங்களுக்கு நாங்கள் கொடுப்போமானால், நாங்கள் நேசித்தது போல் நீங்களும் இந்த பூமியை நேசிக்கத் தெரிந்து கொள்ளுங்கள். அதன்பால் எங்களைப் போலவே கரிசனம் கொள்ளுங்கள். இந்த நிலத்தைப் பெற்றுக் கொள்ளும்போது அது இருந்த விதமாகவே நீடிக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். இனி வரும் சந்ததிகளுக்காக இந்த நிலத்தைப் பாதுகாப்பாக, அதைக் கடவுள் நேசிப்பது போல இந்த நிலத்தை நேசமுடன் வைத்திருங்கள்”
– செவ்விந்திய சமூகத் தலைவன் ஸீயாட்டீல்
சமகாலச்சூழலில், அறமற்ற பெரும்பாதையில் இந்த மானுடப்போக்கு திசைப்படுத்தப்படும் இந்நேரத்தில்… காலங்கடந்து உயிர்த்து நிற்கும் வார்த்தைகளாக ஸீயாட்டீல் மற்றும் சாப்ளின் இவர்களின் சொற்கள் ஒவ்வொன்றும் இன்று வெளியொலிக்கிறது. வாழ்வின்மீதும் இயற்கையின்மீதும் இன்னமும் நம்பிக்கை கொண்டிருக்கும் எல்லா மனங்களுக்குமான பற்றுதலை இவைகள் சுமத்திருக்கிறது.
வாஷிங்டன் ஜனாதிபதிக்கு 1852ல் செவ்விந்திய சமூகத்தலைவன் ஸீயாட்டீல் எழுதிய கடிதத்தின் தமிழாக்கமும், தி கிரேட் டிக்டேட்டர் படத்தின் இறுதிக்காட்சியில் சாப்ளின் பேசும் உரையின் தமிழ்மொழிபெயர்ப்பும்… ஒன்றிணைந்த புத்தகம் “இருதயத்தை நோக்கி இருஉரைகள்”
Reviews
There are no reviews yet.