Description
தமிழகத்தில் பரவலாகக் காணப்படும் 138 பறவைகளின் முழுவண்ணப் படங்கள், அளவு விபரங்கள், ஆண்-பெண் வேறுபாடுகள், வாழ்விடச் சூழல் உள்ளிட்ட பல தகவல்கள் அடங்கிய ஓர் அச்சுக்கையேடு இது. மேலும், குறிப்பிட்ட பறவையானது நிலம்சார்ந்த பறவையினமா அல்லது நீர்சார்ந்த பறவையினமா என்பது உட்பட பறவையியல் சார்ந்த எண்ணற்ற குறுந்தகவல்கள் இதில் அடங்கியுள்ளன.
நம்மைச்சுற்றி நாம் காணும் பறவைகளின் உலகை குழந்தைகள் அறிந்துகொள்வதற்கான மிகச்சிறந்த தெரிவு இக்கையேடு. பறவை பார்த்தல் எனும் சூழியல் செயற்பாட்டுக்கு இந்த வண்ணக் கையேடு மிகுந்த துணைபுரியும். ஒவ்வொரு குழந்தைகளிடத்திலும், ஒவ்வொரு வகுப்பறைகளிலும், ஒவ்வொரு குடும்பத்திலும் நிச்சயம் இக்கையேடு இருப்பது சமகாலப் பேரவசியம்.
நேச்சர் கன்சர்வேசன் டிரஸ்ட் (NCF) எனும் சூழலிய நிறுவனத்தால் இந்த நற்சிறந்த கையேடு, எல்லோருக்கும் புரியும் மொழிநடையில் பறவைகள் குறித்த தகவல்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அச்சாகியுள்ளது. இந்தக் கையேட்டைத் தொடர்ந்து பயன்படுத்தி வரவர, பறவைகளை அடையாளம் காணும் நுண்திறன் குழத்தைகளிடம் அதிகரிக்கும் என்பது கண்கூடான உண்மை.
Reviews
There are no reviews yet.