Description
“ஒரு புத்தகத்தை இன்னொரு புத்தகத்துக்குச் சமர்ப்பிப்பது
எங்காவது இதற்கு முன்பு நிகழ்ந்திருக்கிறதா தெரியவில்லை.
ஆனால் என் கவிதை மொழியையும் சிந்தனையையும்
செதுக்கியதில் விவிலியத்தின் பங்கு முக்கியமானது
நான் இந்த புத்தகத்தை திரு விவிலியத்துக்கு சமர்ப்பிக்கிறேன்”
****************************
இது என்னுடைய ஏழாவது கவிதைத் தொகுப்பு. ஏழு என்பது பல
தளங்களில் ஒரு சுற்றின் நிறைவு. ஏழு நாட்கள். ஏழு நிறங்கள்,
ஏழு ஸ்வரங்கள். கிறித்தவத்தில் மரணத்துக்கு ஒப்பான பாவங்கள்
என்று சொல்லப்படுகிறவையும் ஏழுதான். இந்து மதத்தில்
பரிசுத்தத்துக்கு அடையாளமாகச் சொல்லப்படும் கன்னியர்
தெய்வ ங்களும் ஏழுதான்.
நான் இந்தத் தொகுப்பில் ஒரு சுற்றை பூர்த்தி செய்திருக்கிறேன்
என்பது திரும்பப் படித்துப் பார்த்தால் புரிகிறது.
நான் ஏழு பாவங்களுக்குள்ளும் ஏழு பரிசுத்தங்களுக்குள்ளும் புகுந்து
வந்திருக்கிறேன்.
இனி நான் என்ன செய்யவேண்டும்?
என்கிற ஒரு திகைப்பு ஏற்படுகிறது.
பாடல் முடிந்ததும் சூழ்கிற ஒரு மவுனம்.
ஆனால் அந்த மவுனத்துக்குள்ளேயே புதியதொரு பாடலின் விதை
முட்டுவதன் முறுமுறுப்பு கேட்கிறது.
பாடகனைப் பாட்டு ஒரு நாளும் மணவிலக்கம் செய்வதில்லை.
– போகன் சங்கர்
Reviews
There are no reviews yet.