Description
குழந்தைமையும் களங்கமின்மையும் கைகோர்த்து உலவுகிற தூயவெளியை கருவாகச்சுமந்து யூமா வாசுகி அவர்களின் எழுத்துப் படைப்புகள் உருவாகின்றன. பாசாங்கொழித்து முன்வந்து நிற்கும் தவிப்புக்கு உயிர்நீர் வார்க்கின்ற ஈரக்கரங்கள் போல இவருடைய ஒவ்வொரு கவிதையும் அகத்தை நனைக்கிறது. ‘வயதேறிய கருவாய் எந்த வயிற்றிலோ இன்னமும் கிடந்துகொண்டிருக்கிறேன்’ தன் இருப்பை இறைஞ்சுதலாக வெளிப்படுத்துகிற வெள்ளந்தி மனிதரின் உள்ளமென இவரின் ஒவ்வொரு வார்த்தையும் அன்பின் மகரந்தக்கருவை தன்னுள் கொண்டிருக்கிறது.
கவிதை உதிக்கும் அந்த மனக்கணத்தில் தன் லெளகீகத் துயரனைத்தும் தூசிப்புள்ளியென உட்சுருங்கி மறைந்து, இன்னதென அறியா பெருவல்லமையில் தான் பேருரு கொள்வதாகவும் சொல்கிற யூமா வாசுகி அவர்கள் எதிர்வரும் தலைமுறைப் படைப்பாளிக்களுக்கான நற்சிறந்த பாதையாளர். தீமைகளின் தணல் நடுவே இவருடைய கவிதைகளின் மானுடச்சொல் ஒரு தொல்மரமென நின்றெழுகிறது.
Reviews
There are no reviews yet.