Description
ஏழு நாட்களில் சர்ப்பம் தீண்டி மரித்துவிடுவாய்’ எனும் சாபத்தைப் பெற்றிருந்த பரீக்ஷித்து அரசன் அந்த சாபத்தினுள் சூட்சுமமான வரமொன்று பொதிந்திருப்பதைக் கண்டுகொண்டான். ஏழாவது நாள் அவனுடய மரணம் உறுதி என்றாலும் அதற்கு முன் வரும் ஆறு நாட்கள் இந்த பூமியில் எவர் மரிப்பினும் தான் மரிக்கப் போவதில்லை எனும் வரத்தை அறிந்தே அதி தீவிரமாக பாகவதக் கதைகளை உள் வாங்கிக் கொண்டு ஆத்ம ஞானம் பெற்றான். இதனை மேலும் சற்றே நுண்ணுணர்ந்து கவனித்தால் நாம் உயிர்வாழும் இந்த நொடியும் கூட பரீக்ஷித்து பெற்றுக் கொண்ட வரத்தை ஒத்ததே. நோய் மட்டுமல்ல, எல்லாவித நெருக்கடிகளும், நலிவுகளும், சாபங்களும் இப்படிப்பட்ட வரத்தைச் சூல் கொண்டே நம்மிடத்தில் வந்தமைகின்றன. அதனை படைப்பு விசையாக உருமாற்றிக் கொள்ளும் தீவிரத்தின் விதைகளை நாங்கள் குருவிடமிருந்து பெற்றுக் கொண்ட நாட்கள் அவை.

Reviews
There are no reviews yet.