Description
அகி முதல் கின்மோர் வரை, முகுந்த் வேறு யாரும் நகல் செய்ய முடியாத ஒரு குழந்தைகள் உலகத்தை அதன் பளிங்குடன் படைத்துக் கொண்டே இருக்கிறவர். அசோகமித்திரன் உரைநடை போல இவர் கவிதை. ஆழமான எளிமையின் தவிர்க்க முடியாத சுவடு.
வண்ணதாசன்
முகுந்த் நாகராஜனின் கவிதையுலகில் எப்போதும் இரண்டு வினோதங்கள் நிகழ்கின்றன. ஒன்று குழந்தமையின் களங்கமற்ற கற்பிதங்கள். மற்றொன்று பெரியவர்களின் உலகில் இருக்கும் அபத்தங்களின் விசித்திரங்கள்.
மனுஷ்ய புத்திரன்
முகுந்த் நாகராஜனின் பிரகாசமான உலகம் பிரியங்களின் மர்மங்களும் உறவுகளின் புதிரான ஆழங்களும் வாழ்க்கை என்னும் தற்செயல் பிரவாகத்தின் பேரர்த்தங்களும் நிரம்பியது. குறிப்பாக சிறுமிகள் மேல் அவரது தந்தைமை நிரம்பிய மனம் கவியும் விதம் தமிழ்க் கவிதையின் அழகிய நிகழ்வுகளில் ஒன்று.
~ஜெயமோகன்
Reviews
There are no reviews yet.