Description
இன்று காலை, லட்சுமண ஐயர் அவர்களின் வாழ்வையும், அவர் செய்த அரும்பணிகளையும் அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. மனிதர்களின் பசிப்பிணியைத் தன் தோள்களில் ஏற்று, குறிப்பாக ஏழை எளிய ஒதுக்கப்பட்ட குழந்தைகளின் உள்ளங்களில் கல்வியின் ஒளியை ஏற்றியதன் வழி, அவர் தன்னலமற்ற அன்பின் உருவமாக விளங்கினார். அவரது ஒவ்வொரு செயலும் எண்ணிலடங்கா உள்ளங்களில் மிகப்பெரிய நம்பிக்கையையும். ஆறுதலையும், நல்லெண்ணங்களையும் விதைத்திருக்கிறது.
மகாத்மா காந்தி எண்ணற்றோரை அகிம்சையின் வழி, சத்தியத்தின் வழி நடக்க தூண்டியதுபோல, லட்சுமண ஐயருடன் தோள்கொடுத்து பயணித்தவர்களும், அவர் மனம் தொட்ட அனைவரின் வாழ்வும், அவருடைய கருணைமிக்க சேவையை நிச்சயமாக தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வார்கள், பிறரின் நலனுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட ஒரு வாழ்க்கை, ஒட்டுமொத்த மானுடத்துக்கும் கிடைத்த அருட்கொடையே. அதன் தாக்கம் காலங்களைக் கடந்து நிலைத்து நிற்கும் என்பது உறுதி. உங்கள் பணி என்றும் செழித்து வளர்க.
எனது உள்ளம் கனிந்த அன்பும், பிரார்த்தனையும்
அருட்தந்தை தலாய் லாமா

Reviews
There are no reviews yet.