Description
இந்த புத்தகத்தை நாம ஏன் வாசிக்கணும்? இது யாரை பத்துன புத்தகம்?
நம்ம ஊர்ப் பக்கம் வைராக்கியம் அப்பிடின்னு ஒரு வார்த்தை சொல்லுவாங்க,அதுக்கு ஒட்டு மொத்த எடுத்துகாட்டா இருக்கும் ஜே.சி.குமரப்பா.நம்ம பக்கத்துல இருக்கிறதோட அருமை நாம மறந்து போயிட்டோம்,உண்மையாவும் சத்தியமாவும் வாழ்ந்து காமிச்ச குமரப்பா பத்தி 13 முக்கிய ஆளுமைகள் எழுதின கட்டுரைகளின் தொகுப்பு தான் இந்த புத்தகம்.
தமிழகம் மறந்த தமிழ் மகாத்துமா -குரு மூர்த்தி
லண்டன் மற்றும் அமெரிக்காவில் ஆடிட்டிங் பணிக்காக பொருளாதாரம் பயின்ற ஒரு மனிதர் எப்படி காந்தியை சந்தித்த பிறகு எப்படி இந்தியாவுக்கான ஆளுமையாக உருமாறுகிறார் என இந்த கட்டுரை கூறுகிறது.
ஏன் இந்தியா வறுமையில் வாடுது இந்த கேள்வி தான் குமரப்பா அவர்களை ஆரம்பம் முதல் கடைசி வாழ்நாள் வரை நகர்த்தி கொண்டு வந்துள்ளது.அதற்கான விடையினையும் அவரது வாழ்வு அளித்துள்ளது.
காந்தி குமரப்பாவை பத்திரிக்கையாளராக மாற்றிய தருணம் மிக முக்கியமானது. அதன் பிறகு சுதந்திரம் கிடைக்கும் வரை காந்தியின் வேண்டுகோளுக்கு இணங்க குமரப்பா ஆற்றிய பணிகள் பட்டியல் இடப்பட்டுள்ளது மேலும் அதற்கான பரிசாக அவர் அனுபவித்த சிறைவாசம்.அந்த சிறைவாசத்தில் அவர் எழுதிய இரண்டு முக்கிய புத்தகங்கள்… இன்னும் சொல்ல நிறைய இருக்கிறது…
Reviews
There are no reviews yet.