Description
கும்பகோணம் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் பொழுது, இளம் வாசகர் வட்டம் என்கிற செயல்பாடு தொடங்கியது. கதைகள் கூறுவது, கதைகள் வாசிப்பது, கதைகள் எழுதுவது என நாங்கள் மகிழ்ச்சியாக இருந்தோம். இளம்வாசகர் வட்டம் சார்பாக நடத்தப்பட்ட கதை முகாமில், பல கதைகள் நாங்கள் எழுதினோம். ஒரு சில கதையை நான் மொழிபெயர்த்தும் கொடுத்தேன். எங்கள் 25 கதைகள், ‘என் கனவின் கதை’ என்ற தலைப்பில், தன்னறம் வெளியீடாக வெளிவந்தது.
தற்போது என் அனுபவத்தில், நான் கண்ட நிகழ்வுகளைக் கதைகளாக எழுதி இருக்கிறேன். தன் அன்னையின் உதவியுடன் கதைகளுக்கு படங்கள் வரைந்து கொடுத்த ஆதிரைக்கு நன்றி. குயிலின் இனிய ஓசையும், கதையும் ஏதோ ஒன்றை நமக்குச் சொல்லிக் கொண்டுதான் இருக்கின்றன.
என் கதைகளை, எப்போதும் நான் செல்லும் சேய் குளத்திற்கும், அதில் நீந்தும் மீன்களுக்கும் படைக்கிறேன்.
இப்படிக்கு,
பைராகி
(அ. அன்புசெல்வன்)
கும்பகோணம்

Reviews
There are no reviews yet.